சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்


சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 26 March 2022 7:57 PM IST (Updated: 26 March 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஆதிநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சித்தமருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட மருத்துவ அலுவலர் ராஜி செல்வி பரிந்துரையின்படி நடைபெற்ற இந்த முகாமில் சித்த மருத்துவ அலுவலர் ஜன்னத், இயற்கை மருத்துவர் எஸ்கா யூனிஸ் ஆகிேயார் கலந்துகொண்டு சித்தா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர். 
முகாமில் கபசுர குடிநீர் மற்றும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பானம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story