இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு


இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு
x
தினத்தந்தி 26 March 2022 8:44 PM IST (Updated: 26 March 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு

உடுமலை:
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு மற்றும் பேரணி உடுமலையில் நேற்று நடந்தது. மாநாட்டையொட்டி உடுமலை ரெயில் நிலையம் முன்பு இருந்து பேரணி புறப்பட்டது. பேரணிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.குணசேகரன் முன்னிலை வகித்தார். பேரணி ராஜேந்திரா சாலை, மத்திய பஸ் நிலையம், கல்பனா சாலை, கஸ்தூரி வீதி, சுப்பையாவீதி வழியாக தளி சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் தேஜஸ் மஹாலை வந்தடைந்தது.
அங்கு நடந்த மாநாட்டிற்கு கட்சியின் உடுமலை நகர செயலாளர் சி.தெய்வக்குமார் தலைமை தாங்கினார். தமிழர் பண்பாட்டுப்பேரவை இணைத்தலைவர் பால்நாராயணன் முன்னிலை வகித்தார். சி.ஹாரூன்ரஷீத் கொடியேற்றி வைத்தார். தியாகிகள் படங்களை உடுமலை நகர தலைவர் சி.எஸ்.முருகேஷ் திறந்து வைத்தார்.மாநாட்டை கட்சியின் மாநில தலைவர் பி.கே.பட்டாபிராமன் தொடங்கி வைத்துபேசினார். மாநில செயலாளர் எம்.சுந்தரராஜன் அரசியல் விளக்கவுரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் கே.அப்பாஸ் வேலை அறிக்கையை படித்தார்.மாநாட்டில் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணையை தூர் வாரவும், அந்த பகுதிகளை சுற்றுலா தலமாக்கவும் அரசை கேட்டுக்கொள்வது என்பது உள்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story