திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமையில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட 82 பனப்பாக்கம் மற்றும் மதுரவாசல் ஆகிய 2 கிராமங்களில் பிரபல தனியார் நிறுவனம் நடத்த அனுமதி வழங்கியதில் ரூ.62 லட்சத்து 48 ஆயிரத்து 612 முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story