தாராபுரத்தில் பழுதடைந்த சத்துணவு கூடம் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது
தாராபுரத்தில் பழுதடைந்த சத்துணவு கூடம் ரூ10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது
தாராபுரம்:
தாராபுரத்தில் பழுதடைந்த சத்துணவு கூடம் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
அமைச்சர் திறப்பு
அரசு பள்ளிகளை தனியார் (ஆற்றல்) அறக்கட்டளையினர் இணைந்து அரசு பள்ளிகளின் சத்துணவு கூடத்தை புதுப்பித்து தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் இருந்த சத்துணவு கூடத்தை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக புதுப்பித்துள்ளனர். இந்த நிலையில் பணிகள் முடிந்து, மாணவர்கள் பயன்பாட்டுக்காக சத்துணவு கூடம் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான விழா நேற்று தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி தலைமை தாங்கினார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மாணவர்களின் பயன்பாட்டிற்கு சமையல் கூடம் மற்றும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
ரூ.10லட்சம் செலவில்...
பின்னர் அவர் பேசியதாவது, ஆற்றல் பவுண்டேஷன் நிறுவனத்தின் தன்னலமற்ற சேவையை பாராட்டுகிறேன். மேலும் நலிவடைந்த அரசுப் பள்ளியான தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சமையல்கூடம் மற்றும் மாணவர்கள் உணவு அருந்தும் கூடம் ஆகியவற்றை ரூ.10 லட்சம் செலவில் சீரமைத்து- புதுப்பித்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி சத்துணவு கூடம் சீரமைத்து வண்ணம் புதுப்பித்தல், டைல்ஸ் தரை தளம் அமைத்தல் மற்றும் மின் இணைப்பு போன்ற வேலைகளை செய்துள்ளனர். (ஆற்றல்) அறக்கட்டளை குழுவினருக்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், வார்டு கவுன்சிலர் முகமது யூசுப், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story