திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது


திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 8:57 PM IST (Updated: 26 March 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,  

ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). இவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை இவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் 5-வது தெருவில் பெண் ஒருவரை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணிடம் 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் அந்த வாலிபர்களிடம் ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 2 வாலிபர்களும் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனிடம் தகராறில் ஈடுபட்டதோடு் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனின் தலையில் வெட்டியுள்ளனர். இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 20 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களில் ஒருவரான சென்னை வில்லிவாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜய் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மற்றொரு நபரான பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story