மணப்பாறை தாசில்தார் பணியிட மாற்றம்


மணப்பாறை தாசில்தார் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 9:15 PM IST (Updated: 26 March 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை தாசில்தார் பணியிட மாற்றம்

மணப்பாறை, மார்ச்.27-
மணப்பாறை தாசில்தார் சேக்கிழார். இவரிடம் ஒருவர் தொடர்பு கொண்டு லாரி அதிவேகமாக செல்வது குறித்து புகார் செய்துள்ளார். இந்த நிலையில். அவரிடம் மிரட்டும் தொணியில் தாசில்தார் பேசும்  குரல்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. புகார் தெரிவிப்பவரின் கோரிக்கையை கேட்டறிந்து அவரது பிரச்சினையை சமரசம் செய்துவைக்க முயலாமல் பொறுப்பற்ற முறையில் தாசில்தார்  பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவராசுவின் கவனத்திற்கு சென்ற நிலையில் தாசில்தார் சேக்கிழார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story