எடப்பாடியில் அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் கைது


எடப்பாடியில் அரசு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 9:23 PM IST (Updated: 26 March 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடியில் மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

சங்ககிரி:
எடப்பாடியில் மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
மாணவி பலாத்காரம்
எடப்பாடி வெள்ளாண்டிவலசு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). டான்ஸ் மாஸ்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவையொட்டி மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுத்தார். அப்போது 13 வயது மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 
இதனால் அவர் அடிக்கடி மாணவி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து வந்தார். அப்போது மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் தாய் சரவணனை கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் மாணவியை பலாத்காரம் செய்து வந்தார். 
டான்ஸ் மாஸ்டர் கைது
இதனால் தற்போது 15 வயதாகும் அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி சரவணன் மாணவியை கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். 
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டர் சரவணனை கைது செய்தார். மாணவி சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story