விக்கிரவாண்டி அருகே தம்பதியை தாக்கிய வாலிபர் கைது


விக்கிரவாண்டி அருகே தம்பதியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 9:45 PM IST (Updated: 26 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே தம்பதியை தாக்கிய வாலிபர் கைது


விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் போஸ்ட் ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 42). இவரது மனைவி விஜயலட்சுமி(36), அதே வீதியில் வசிப்பவர்  செந்தில்குமார்(40). இவரது மனைவி கீதா(35). இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்கள். இதில் செந்தில்குமார் தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் விஜயலட்சுமி தனது வயிற்றில் சோதனைக்குழாய் மூலம் கருவை சுமந்து பின்னர் கீதா குழந்தை பெற்றெடுத்தார். இதை விஜயலட்சுமி பலரிடம் சொல்லி கேலி செய்ததால் அவர் மீது செந்தில் குமார் ஆத்திரம் அடைந்தார். 

நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமி தம்பதியினர் அவர்கள் வீட்டில் அமர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த செந்தில்குமார் தன்னைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்ற நினைத்து ஆத்திரமடைந்து இரும்பு பைப்பால் அவர்கள் இருவரின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சரவணன், விஜயலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப் பதிவுசெய்து செந்தில்குமாரை கைது செய்தார்.

Next Story