அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுடன் கலந்துரையாடினார்


அனந்தபுரம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுடன் கலந்துரையாடினார்
x
தினத்தந்தி 26 March 2022 9:50 PM IST (Updated: 26 March 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுடன் கலந்துரையாடினார்


செஞ்சி

திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காலை 9 மணிக்கு பள்ளி வளாகத்துக்குள் கலெக்டர் வந்தபோது வகுப்புகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் மாணவ-மாணவிகள் மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் மோகன் அருகில் சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களிடம் என்ன பாடம் படிக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களுடைய கல்வித்திறன் குறித்து கேட்டறிந்த அவர் ஒவ்வொருவரும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் 100 சதவீத இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று அறிவுரை வழங்கினார். 

மாணவர்கள் மகிழ்ச்சி

மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கேட்டுக்கொண்ட கலெக்டர் மோகன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் சுத்தமாக உள்ளதா? போதிய தண்ணீர் வசதி உள்ளதா? தற்போது பயன்பாட்டில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். திடீரென பள்ளி வளாகத்தில் நுழைந்து ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் தங்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய சம்பவம் மாணவ-மாணவிகளுக்கு வியப்பாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.


Next Story