தேக்கம்பட்டியில் தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்பு
தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தட்டச்சு தேர்வில் 900 பேர் பங்கேற்றனர்.
ஆண்டிப்பட்டி:
தமிழகம் முழுவதும் நேற்று தட்டச்சு தேர்வு நடைபெற்றது. அதன்படி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில், 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டனர்.
பொதுவாக தட்டுச்சு தேர்வு 55 நிமிடங்களில், 2 தாள்களை கொண்டதாக நடத்தப்படும். முதல் தாள் தட்டச்சு தேர்வு 10 நிமிடங்களும், 2-ம் தாள் 45 நிமிடங்கள் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தட்டச்சு தேர்வில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி தேர்வில் 2-ம் தாள் முதலாவதும், முதல் தாள் 2-வதாகவும் நடைபெற்றது.
இதற்கிடையே மாற்றம் செய்யப்பட்ட தட்டச்சு தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். முதலில் 45 நிமிடங்கள் கொண்ட 2-ம் தாள் தட்டச்சு செய்து விட்டு, அடுத்ததாக முதல்தாள் தட்டச்சு செய்யும் போது, தட்டச்சு எந்திரத்தை கையாளுவது எளிதாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story