அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா


அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா
x
தினத்தந்தி 26 March 2022 10:04 PM IST (Updated: 26 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வார விழா

விழுப்புரம்

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 33-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர்கள் வினோதினி, தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளையும், சைகைகளையும் பின்பற்றினால் சாலை விபத்துகளை தடுக்க முடியும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டிச்செல்ல கூடாது, இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மாணவ- மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Next Story