லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
படந்தாலுமூடு தருவக்காட்டுவிளையை சேர்ந்தவர் ஆன்றோ சீனு (வயது 39), லாரி டிரைவர். இவருக்கு மினிமோள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆன்றோ சீனுவுக்கு கடந்த சில நாட்களாக சரியாக வேலை இல்லை. இதையடுத்து அவர் தனது சகோதரி ஆன்றோ சிந்துவிடம் தனக்கு ஏதாவது வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
இதனைதொடா்ந்து சகோதரி தனது கணவரின் நண்பரான நாகர்கோவில் சேவியர்காலனியை சேர்ந்த செந்தில் துரை குமாரிடம், ஆன்றோ சீனுவுக்கு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்காக ஆன்றோ சீனு, நாகர்கோவிலில் செந்தில் துரைகுமாரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆன்றோ சீனு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story