விக்கிரவாண்டி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விக்கிரவாண்டி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 10:12 PM IST (Updated: 26 March 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி தாலுகாவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையத்தில் பெரிய ஏரி உள்ளது. 88 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 15 ஹெக்டேர் பரப்பளவை விவசாயிகள் ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தாசில்தார் இளரவசன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், பொதுபணித்துறை உதவிபொறியாளர் வித்யேஷ்வர், கிராம நிர்வாக அலுவலர் இளந்திரையன், உதவியாளர் சதீஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர் மலர்விழி பாலு ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.


Next Story