புறக்காவல் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா

புறக்காவல் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா
x
தினத்தந்தி 26 March 2022 10:41 PM IST (Updated: 26 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே திருநெய்பேரில் புறக்காவல் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்;
திருவாரூர் அருகே திருநெய்பேரில் புறக்காவல் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புறக்காவல் நிலையம்
திருவாரூர் தாலுகா போலீஸ் சரகத்தில் உள்ள திருநெய்பேர் பகுதியில் புறக்காவல் நிலையம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். 
இதனால் இந்த பகுதியில் குற்றங்களும் குறைந்தது.
இந்தநிலையில் திருநெய்பேர் புறக்காவல் நிலையம் முழுமையாக செயல்படாமல் அதிக நேரம் பூட்டி கிடக்கிறது. இந்த புறக்காவல் நிைலயத்துக்கு உரிய போலீசார் பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
கோரிக்கை 
இதனால் இந்த பகுதி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே திருநெய்பேர் புறக்காவல் நிைலயத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வே போலீஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story