சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள்

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள்
x
தினத்தந்தி 26 March 2022 10:52 PM IST (Updated: 26 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம்:
சுட்டெரிக்கும் வெயிலால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி,  குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
சுட்டெரிக்கும் வெயில் 
கடந்த 2 ஆண்டுகளாக சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின.  மேலும் ஏரி பாசன சாகுபடி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிலத்தடி நீர்மட்டம் 20 அடிக்கு மேல் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக கடைமடை பகுதியில் போதிய மழை இல்லை. தற்போது கடைமடையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 
வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள் 
இ்ந்த வெயில் தாக்கம் காரணமாக தினமும் ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்து வறண்டு வருகி்ன்றன. மேலும் சிறிய குளம் முதல் பெரிய ஏரி வரை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் ஆழ்குழாய் கிணறுகளில் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய மழை பெய்தால் மட்டுமே ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயரும். 

Next Story