தக்கோலம் பேரூராட்சி துணை தலைவராக கோமளா தேர்வு


தக்கோலம் பேரூராட்சி துணை தலைவராக கோமளா  தேர்வு
x
தினத்தந்தி 26 March 2022 10:52 PM IST (Updated: 26 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

தக்கோலம் பேரூராட்சி துணை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கோமளா தேர்வு செய்யப்பட்டார்.

அரக்கோணம்

தக்கோலம் பேரூராட்சி துணை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கோமளா தேர்வு செய்யப்பட்டார்.

தக்கோலம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாகராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அப்போது இதனை சற்றும் எதிர்பார்க்காத அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு துணை தலைவருக்கான தேர்தலில் கலந்து கொள்ளவில்லை என கூறி புறக்கணித்தனர். 

இந்த நிலையில் நேற்று நடந்த தக்கோலம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கோமளா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவசரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த லாவன்யா 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதனையடுத்து துணை தலைவராக வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த கோமளாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் சான்றிதழ் வழங்கினார். அப்போது தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளரும் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான வடிவேலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story