இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x
தினத்தந்தி 27 March 2022 12:15 AM IST (Updated: 26 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

காடாக்குடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சீர்காழி:-

காடாக்குடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காடாக்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காடாக்குடி சாலை ஓரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
இந்த குடிநீர் தொட்டி இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் உள்ள கான்கிரீட் தூணில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து சிதிலம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. 

புனரமைக்க வேண்டும்

இதனால் நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சிதிலம் அடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Next Story