ஆற்றங்கரை சாலையை சூழ்ந்த கருவேல மரங்கள்
கொள்ளிடம் பகுதியில் ஆற்றங்கரை சாலையை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கொள்ளிடம்:-
கொள்ளிடம் பகுதியில் ஆற்றங்கரை சாலையை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
போக்குவரத்துக்கு இடையூறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் இருந்து சந்தப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கொள்ளிடம் ஆற்றின் வலது கரையையொட்டி சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது.
சாலையை சூழ்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அகலப்படுத்த வேண்டும்
இந்த சாலையை ஒட்டி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சாலையை கருவேல மரங்கள் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், சாலையை அகலப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story