100 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
வரி செலுத்தாததால் 100 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை இணங்கள், திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டாளர் கட்டணம் என மொத்தம் ரூ.11 கோடியே 90 லட்சம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள வரிகளை நாகை நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும். நகராட்சிக்கு வரிகளை செலுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்நாகை வெளிப்பாளையம், சிவன் வீதி, பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக வரி செலுத்தாமல் இருந்த 100 குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். நிலுவையில் உள்ள வரிகளை உடனே செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story