பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
புதூரில் இருந்து சங்கராபுரத்துக்கு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு மாணவர்கள் செல்கிறாா்கள். விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க கோாிக்கை விடப்பட்டுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு,
பாக்கம், மேல்புதூர், கானாங்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக புதூர் கூட்டுரோட்டிற்கு வருவார்கள். பின்னர் அங்கிருந்து அரசு பஸ்சில் சங்கராபுரம், தேவபாண்டலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்கிறார்கள். காலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் அதில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிக்கு செல்வதை காணமுடிகிறது. விபரீதம் நிகழும் முன் புதூரில் இருந்து சங்கராபுரத்திற்கு தினமும் காலையில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story