பாண்டியநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள்
பாண்டியநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
சோளிங்கர்
பாண்டியநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
பாண்டியநல்லூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
சோளிங்கரை அடுத்துள்ள பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 ஆயிரத்து 579 பேர் 5 பவுன் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்று பரிந்துரைக்கப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் கூட்டுறவு சங்கத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 ஆயிரத்து 579 பேர் அடகு வைத்திருந்த ரூ.7 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைக்கடனை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களுடன் நகைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெயகோபி மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சோளிங்கர் அருகே நீலகண்டராயன்பேட்டை கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 213 நபர்களுக்கு ரூ.66 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்து அவற்றின் உரிமையாளர்ளுக்கு அடகு வைத்த நகை, சான்றிதழுடன் திரும்பி வழங்கப்பட்டது.
இதில் சோளிங்கர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான டீ.கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் இயக்குனர்கள் கலந்துகொண்டு அடகு வைத்த நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினர். முடிவில் செயலாளர் சேதுபதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story