சேந்தமங்கலம் அருகே மாடுகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது


சேந்தமங்கலம் அருகே மாடுகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 11:22 PM IST (Updated: 26 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே மாடுகள் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள தெற்கு திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சபாபதி (வயது 60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, துரை ஆகியோரின் கறவை மாடுகள் சமீபத்தில் திருட்டு போனது. இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் அவர் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்றவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி மாடுகளை திருடியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (30), தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பெத்தூர் பகுதியை சேர்ந்த சுலோசனா (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கறவை மாடுகள், கொண்டு செல்ல பயன்படுத்திய ஆட்டோவை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டனை ராசிபுரம் கிளை சிறையிலும் சுலோசனாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

Next Story