தர்மபுரி அதியமான்கோட்டை பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
தர்மபுரி, அதியமான்கோட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நல்லம்பள்ளி:
தர்மபுரி, அதியமான்கோட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக வாகன சோதனை நடத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தொப்பூர் போலீசார் நேற்று வெள்ளக்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் கோவையை சேர்ந்த சக்திவேல் (வயது 40), விஜயகுமார் (51), காரிமங்கலம் பகுதியை சேர்ந்த குரலரசன் (29) என தெரிய வந்தது.
13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மேலும் இவர்கள் 3 பேரும் தர்மபுரி, அதியமான்கோட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story