ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர்வாரப்படுமா?
ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் தூர்வார வெண்டும்.
மூங்கில்துறைப்பட்டு,
ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சாத்தனூர் அணையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் திறக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது அணையில் இருந்து விரைவில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து வலதுபுற கால்வாய் வழியாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 48 ஏரிகளுக்கு செல்கிறது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாசனத்திற்காக சாத்தனூர் அணை விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் ஏரிகளுக்கு வரும் கால்வாய்கள், கிளை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. பல இடங்களில் கால்வாய்கள் தூர்ந்து கிடக்கின்றன. அதுமட்டுமின்றி ஷட்டர்களும் சேதமடைந்து உள்ளன. இதனால் இந்த ஆண்டு அணை நீர், கடைமடைக்கு வராது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்கும் சாத்தனூர் அணை தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஏரிகளுக்கு செல்லும் கால்வாய், கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கை நிறைவேறுமா?, சாத்தனூர் அணை தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Related Tags :
Next Story