திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் 4 ஆயிரத்து 591 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த தட்டச்சு தேர்வில் 4 ஆயிரத்து 591 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
திண்டுக்கல்:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் அரசு தொழிற்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு போட்டி தேர்வுகளில் தட்டச்சு முக்கிய தகுதியாக கருதப்படுகிறது. இதனால் தட்டச்சு தேர்வில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த தேர்வு, இந்த மாதத்துக்கு மாற்றப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனியில் 5 கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த 5 மையங்களிலும் இன்று தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 4 ஆயிரத்து 591 பேர் பங்கேற்றனர். இதையடுத்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தட்டச்சு தேர்வு நடக்கிறது.

Related Tags :
Next Story