4 மையங்களில் அரசு தட்டச்சு தேர்வு
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில் 185 மையங்களில் நேற்று அரசு தட்டச்சு தேர்வு நடைபெற்றது.
விருத்தாசலம்,
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில் 185 மையங்களில் நேற்று அரசு தட்டச்சு தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி, சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, நெய்வேலி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரி ஆகிய மையங்களில் நேற்று தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வுகளின் 3 அணிகளும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகளின் 1-வது அணி மற்றும் 2-வது அணிக்கும் தேர்வு நடந்தது.
இதில் விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரியில் நடந்த தேர்வில் விருத்தாசலம், பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 1,080 பேர் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்வின் 4 மற்றும் 5-வது அணியும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்வுகளின் 3 மற்றும் 4-வது அணிக்கும் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் உயர் வேகத்தேர்வு நடக்கிறது. இதுதவிர 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும் புகுமுக இளநிலை தேர்வும் நடக்கிறது.
Related Tags :
Next Story