திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 11:38 PM IST (Updated: 26 March 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே சாலையோரத்தில் காய்கறி, பூ, பழம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் சப்-கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து ஏ.எம்.சி. சாலைக்கு திரும்பும் இடத்தில் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் லாரி மோதியதில் இறந்தார். இதையடுத்து அங்குள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் போலீசாரின் துணையோடு ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.


Next Story