அகஸ்தியம்பள்ளி பத்ரகாளியம்மன் கோவிலில் சண்டி யாகம்


அகஸ்தியம்பள்ளி பத்ரகாளியம்மன் கோவிலில் சண்டி யாகம்
x
தினத்தந்தி 26 March 2022 11:41 PM IST (Updated: 26 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

உலக நன்மை பெற வேண்டி அகஸ்தியம்பள்ளி பத்ரகாளியம்மன் கோவிலில் சண்டி யாகம் நடந்தது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அகஸ்தியம்பள்ளி சேது ரஸ்தாவில்  பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி யாகம் நடந்தது.  இதையொட்டி  புனித நீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பலவிதமான திரவியங்கள், பழ வகைகள், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகள் போடப்பட்டது. பின்னர்  புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள், மருளாளிகள் மற்றும் கிராமவாசிகள்  செய்திருந்தனர்.

Next Story