பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 March 2022 11:41 PM IST (Updated: 26 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோவில், 

 காட்டுமன்னார்கோவிலில் வடவாற்றில் இருந்து பிரியும் கஸ்பா வாய்க்காலை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். 

 இந்நிலையில்,  சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் உத்தரவின்பேரில் கீழணை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் வெற்றிவேல் மற்றும் பாசன பிரிவு ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story