மண்டலாபிஷேகத்தையொட்டி வழிவிடு வேல்முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம்


மண்டலாபிஷேகத்தையொட்டி  வழிவிடு வேல்முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 27 March 2022 12:00 AM IST (Updated: 27 March 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

வழிவிடு வேல்முருகன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

ஆவூர்:
விராலிமலை தாலுகா, மேலபச்சகுடி ஊராட்சிக்குட்பட்ட பாத்திமாநகரில் வழிவிடு வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக 48-வது நாளான நேற்று மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைமுன்னிட்டு நேற்று காலை 9 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம், காவடி எடுத்து கொண்டு அரோகரா! அரோகரா! என்ற பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வழிவிடு வேல்முருகன் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைதொடர்ந்து யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து முருகன் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று இரவு கோவில் அருகே வள்ளி திருமணம் எனும் புராண நாடகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story