சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படம்- புத்தக கண்காட்சி
ராமநாதபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படம்-புத்தக கண்காட்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படம்-புத்தக கண்காட்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
புகைப்பட, புத்தக கண்காட்சி
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் விடுதலை போரில் தமிழகம் என்ற புகைப்பட கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்திய விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு வரலாற்றுத் தொகுப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்த புகைப்படங்கள், சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் ராமநாதபுரம் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட தொகுப்பு மற்றும் சிறப்பு புத்தக கண்காட்சி என பலவும் அரங்கில் இடம்பெற்றுள்ளன.
பரிசுகள்
இதையொட்டி பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், கிராமிய பாட்டு, சிலம்பாட்டம், தெம்மாங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகளை போற்றும் விதமாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி- வினா ஆகிய போட்டிகளும், கைப்பந்து, கால்பந்து, ஆக்கி போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும் மற்றும் 100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தனிநபர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உதவி அலுவலர் வினோத், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் சிவகங்கை வக்கீல் வைரமணி, ராமேசுவரம் வீட்டுவசதி வாரிய ேசர்மன் அயோத்திராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story