தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2022 12:08 AM IST (Updated: 27 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர், 

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரமணி (வயது 28) தொழிலாளி. இவரது மனைவி விஜயசாந்தி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று விஜயசாந்தி, விருத்தாசலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வந்ததால், வீட்டில் சமைக்கவில்லை என தெரிகிறது.

இதனால் வீரமணி, ஏன் சமைக்கவில்லை என விஜயசாந்தியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரமணி, விஜயசாந்தியை அடித்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதில் விஜயசாந்தி இறந்து விட்டார் என நினைத்து வீரமணி, தன்னை அவரது உறவினர்கள் அடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதற்கிடையே மயக்கம் தெளிந்து எழுந்த விஜயசாந்தி, வீரமணி தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story