ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி பொன்னமராவதியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் பாதை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர்கழகம், வி.சி.க., மே-17 இயக்கம், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ., ம.தி.மு.க ஆகிய கட்சிகளை சார்ந்த கட்சி பிரதிநிதிகளும் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர். இதில் ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க.வை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story