90 மாணவர்களுக்கு இருளர் சமூக சாதி சான்று


90 மாணவர்களுக்கு இருளர் சமூக சாதி சான்று
x
தினத்தந்தி 27 March 2022 12:19 AM IST (Updated: 27 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு தாலுகாவில் 90 மாணவிகளுளுக்கு இளருர் சமூக சாதி சான்று வழங்கப்பட்டது.

பேரணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா மாச்சம்பட்டு ஊராட்சி குப்புராசபல்லி, மசிகம் ஊராட்சி மிட்டப்பல்லி, எருக்கம்பட்டு ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள பள்ளிகளில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் சப்-கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். அமலு விஜயன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் 90 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார்் வடிவேல், வருவாய் ஆய்வாளர் பஞ்சாட்சரம், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட், ஒன்றிய கவுன்சிலர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story