வேலூர் சிறையில் இருந்தபோது சகல வசதிகளை அனுபவித்தேனா? வைகோ வேதனை


வேலூர் சிறையில் இருந்தபோது சகல வசதிகளை அனுபவித்தேனா? வைகோ வேதனை
x
தினத்தந்தி 27 March 2022 12:24 AM IST (Updated: 27 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சிறையில் இருந்தபோது சகல வசதிகளை அனுபவித்தேனா? வைகோ வேதனை

எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் டி.என்.குருசாமியின் நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக திருச்செங்கோடு மண்ணாடிபாளையத்தில் உள்ள டி.என்.குருசாமியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மணி குருசாமி, மகன் அசோகன், மகள் லதா உள்ளிட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த குருசாமியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். அப்போது வைகோவின் மனைவி ரேணுகா தேவி உடன்இருந்தார். 
இதை தொடர்ந்து திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில் டி.என்.குருசாமி நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நடந்தது. ம.தி.மு.க. நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வைகோ பேசுகையில், நான் பொடா கைதியாக வேலூர் சிறையில் இருந்தபோது சகல வசதிகளையும் நான் அனுபவித்ததாக வேலூர் சுப்பிரமணியம் என்பவர் கூறியதாக ம.தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவர் தொலைக்காட்சி பேட்டியில் கூறுகிறார். 
சிறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை தான் சாப்பிட்டேன். மனசாட்சியை ஆழ குழி தோண்டி புதைத்து விட்டு கட்சி பொறுப்பில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு மத்தியில் டி.என். குருசாமி போன்ற விசுவாசிகளை இழந்தது மனதை கனக்க வைக்கிறது என வேதனையுடன் பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story