ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை


ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 27 March 2022 12:33 AM IST (Updated: 27 March 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

ஆலயத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கடலூர், 

திட்டக்குடி அருகே உள்ள லட்சுமணபுரத்தை சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

லட்சுமணபுரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒருவர், தனது இடம் ஆலயத்தின் இடத்துடன் சேர்ந்து இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆலயத்திற்குள் நுழைந்து சிலுவை, கல்வெட்டு மற்றும் பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றார். இதுபற்றி தட்டிக்கேட்டால் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றார். இதுகுறித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆலயத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story