போலி டாக்டர் கைது
ஜோலார்பேட்டை அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் கிராமம் பொகுசலான் வட்டத்தில் மருத்துவ படிப்பு படிக்காமல் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருப்பத்தூர் சுகாதார இணை இயக்குனர் மாரிமுத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வேல்முருகன் மற்றும் சுகாதாரத்துறையினர் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்களுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு 20 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரை பிடித்து ேஜாலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அங்கிருந்த ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story