செவ்வாய்க்கிழமை தோறும் சிறுநீரக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை


செவ்வாய்க்கிழமை தோறும் சிறுநீரக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை
x
தினத்தந்தி 27 March 2022 12:59 AM IST (Updated: 27 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க்கிழமை தோறும் சிறுநீரக சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை

திருச்சி, மார்ச்.27-
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி புத்தூரில் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் ஏற்கனவே பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் சுகப்பிரசவமாக தமிழக அரசின், மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்குதல் மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு பிரிவு, பிரதி வாரம் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வர்ம சிகிச்சை பிரிவு, சிறப்பு குழந்தைக்கான பிரிவும், பிரதிவாரம் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆயுஷ் கிளப் மற்றும் தினந்தோறும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கைமுறை காரணமாக அதிக மக்கள் சிறுநீரக கல்லடைப்பு, சிறுநீரகசெயல்இழப்புநோயால்பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பகல் 12 மணி, மாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீரக கல்லடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிறப்பு சித்த மருத்துவ பிரிவு தொடங்க இருக்கின்றது. இப்பிரிவில் இலவச மருத்துவ சிகிச்சை, இலவச மருந்துகள் வழங்கப்படும்.இப்பிரிவை பொதுமக்கள் பயன்படுத்தி பலன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story