240 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்
திருப்பத்தூரில் 240 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்கள்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் 240 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்கள்.
240 பயனாளிகளுக்கு...
திருப்பத்தூர் தனியார் மகாலில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு 240 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள நகை கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
3 மாவட்டங்களில் பயிர்க்கடன்
கூட்டுறவு சங்கங்களில் இயங்கி வரும் வங்கிகளில் ஏழை எளியவர்கள் பயன்பெறுகின்ற வகையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகைகளை உரியவர்களிடமே வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. உண்மையான பலன் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிர்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தள்ளுபடியினை பெற்றவர்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற இயலாது. தகுதியான பயனாளிகளாக இருந்தால் அதற்குரிய பலன் உடனடியாக வழங்கப்படும்.
கடந்த 4 நாட்களில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை. ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் பயிர்க்கடன் பெறுவதற்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு ரூ.80 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடப்பாண்டில் கூடுதலாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு மொத்தம் ரூ.123 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும் போது, தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி உள்ேளாம். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 23,553 கடன்தாரர்களுக்கு ரூ.93.05 கோடி மதிப்பீட்டிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மானாமதுரை ெதாகுதி தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், துணை தலைவர் கான்முகமது, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக சிவகங்கை மண்டல இணை பதிவாளர் சினு வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாராயணன், திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, திருப்பத்தூர்,சிங்கம்புணரி,கல்லல், சாக்கோட்டை உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்க செயலாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் திருப்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்குடி சரக துணைப்பதிவாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story