ரூ.2½ லட்சத்துக்கு நாணயங்களை கொடுத்து புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய வாலிபர்


ரூ.2½ லட்சத்துக்கு நாணயங்களை கொடுத்து புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய வாலிபர்
x
தினத்தந்தி 27 March 2022 1:16 AM IST (Updated: 27 March 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2½ லட்சத்துக்கு நாணயங்களை கொடுத்து புதிய மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் வாங்கினார்.

சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 24). பி.சி.ஏ. பட்டதாரியான இவர், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து, புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று வாங்கினார். ஒரு ரூபாய் நாணயங்களை மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஷோரூமில் மூட்டையில் இருந்து அவர் கொட்டியதால் அங்கு அது மலைபோல் குவிந்து கிடந்தது. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் உள்பட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பூபதி கூறும் போது, ‘ஒரு ரூபாய் நாணயங்களாக சேமித்து அதன் மூலம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்க ஆசைப்பட்டேன். இதற்காக கடந்த 3 மாதங்களாக சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வங்கிகள், டீக்கடைகள், மளிகை கடைகள் என பல்வேறு இடங்களில் இருந்தும், நண்பர்கள் மூலமாகவும் ஒரு ரூபாய் நாணயங்களை வாங்கி சேமித்தேன். தற்போது ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு தனக்கு விருப்பப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளேன்’ என்றார்.

Next Story