இலவச மருத்துவ முகாம்
இலுப்பக்குடி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக சாக்கோட்டை ஒன்றியம் இலுப்பக்குடி கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் பெத்தா லட்சுமி தலைமை தாங்கினார்.இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு முன்னிலை வகித்தார். சாக்கோட்டை முன்னாள் ஒன்றிய ்தலைவர் சுப. முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த ராசு முகாமைத் தொடங்கி வைத்தார்.டாக்டர் பிரியங்கா மற்றும் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி மற்றும் சங்கராபுரம் சுகாதார ஆய்வாளர் விஜய தாமரை, இலுப்பக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் இலுப்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முகாமில் ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story