விருதுநகர் பாலியல் வழக்கில் கைதான 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்
விருதுநகர் பாலியல் வழக்கில் கைதான 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்,
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிைறயில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் 4 பேரும் திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதால், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story