தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்து ஆச்சாம்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மின்கம்பங்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பங்கள் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
குண்டும், குழியுமான சாலை
தஞ்சை மாவட்டம் மேலக்காவேரி பாலம் இரக்கம் முதல் சுவாமிமலை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கிவிடுவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் மழைநீர் தேங்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story