நங்கவள்ளி அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் தற்கொலை


நங்கவள்ளி அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2022 1:32 AM IST (Updated: 27 March 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே தனியார் பள்ளி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

மேச்சேரி:
நங்கவள்ளி அருகே உள்ள வனவாசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாண்டவன். இவரும், ஜலகண்டாபுரம் சவுண்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷினியும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். தாண்டவன் அரசு வேலைக்கு செல்ல வீட்டிலிருந்து படித்து வந்தார். எம்.எஸ்சி. பட்டதாரியான சுபாஷினி தனியார் பள்ளி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவர் வீட்டின் மாடியில் உள்ள மேல் அறையில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுபாஷினி தந்தை பாபுராஜ் கொடுத்த புகாரின்பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங்கும் விசாரித்து வருகிறார்.

Next Story