வெம்பக்கோட்டை அணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு


வெம்பக்கோட்டை அணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 26 March 2022 8:13 PM GMT (Updated: 2022-03-27T01:43:34+05:30)

வெம்பக்கோட்டை அணையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தாயில்பட்டி, 
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் தற்போது 16 அடி நீர்மட்டம் உள்ளது. இந்த நீர்மட்டத்தை பார்ப்பதற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் அணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அஸ்தி கரைக்கவும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் தடையை மீறி செல்வதால் பொதுமக்கள் நுழையும் இடத்தில் கேட் போட்டு அடைத்துள்ளனர். 


Next Story