வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2022 1:55 AM IST (Updated: 27 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

காரியாபட்டி, 
வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 
தனியார் நிறுவனம் 
காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அங்கு பஞ்சு சேராமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. 
இதனால் அவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் குரண்டியிலுள்ள வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணையிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமுத்து இறந்தார். இதுகுறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
வயிற்றுவலியால் அவதி 
நரிக்குடி மானூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (43). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் மானூரில் உள்ள ஒரு கோவில் அருகில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கிடந்தார். உடனே அவரை நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி இறந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை 
திருச்சுழி ெரயில்வே பீடர் சாலையை சேர்ந்தவர் பழனிபெத்தார் (33). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததால் இவருடைய தந்தை வேலைக்கு செல்லுமாறு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பெத்தார் வீட்டின் மாடியில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story