வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு


வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 27 March 2022 1:58 AM IST (Updated: 27 March 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சியில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று பேரூராட்சியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுப்புலட்சுமி, தி.மு.க. கவுன்சிலர்கள்  பீட்டர், செல்வ ரத்தினம் ஆகிய 3 பேர் மட்டுமே வந்தனர். பெரும்பான்மையான  உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரித்திவிராஜ் அறிவித்தார். 

Next Story