அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழிகளில் வழிபட்டாலும் தெய்வம் ஒன்று தான்;பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம்
பாரதியார் கவிதையை கூறி அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழிகளில் வழிபட்டாலும் தெய்வம் என்பது ஒன்று தான் என கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார்.
கொல்லங்கோடு,
பாரதியார் கவிதையை கூறி அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழிகளில் வழிபட்டாலும் தெய்வம் என்பது ஒன்று தான் என கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார்.
கவர்னர் தமிழில் பேசினார்
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தொடக்க நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி. பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். சகோதர சகோதரிகளே என தமிழில் பேசினார். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக தமிழ் கற்று தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தெய்வம் ஒன்று தான்
இந்த கோவிலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கோவிலில் வழிபடும் பத்திரகாளி அம்மனை இந்தியா முழுவதும் உள்ள காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களது மொழிகளில் வழிபட்டாலும் தெய்வம் என்பது ஒன்று தான். பக்தி என்பதும் ஒன்று தான். அதைத்தான் பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த மகாகவி பாரதியார் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என கவிதையில் கூறியுள்ளார். ஒருவரது சிந்தனை, மதம், மொழி ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்வது என்னை வியப்படைய செய்துள்ளது. இந்த கோவிலில் வந்திருக்கின்ற எழுச்சி மிகு இளைஞர்களையும், இளம்பெண்களையும் பார்க்கும் போது இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என எண்ண தோன்றுகிறது. இந்த கோவில் அனைத்து கோவில்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story