கர்நாடகத்தில் புதிதாக 79 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 79 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 March 2022 2:22 AM IST (Updated: 27 March 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 79 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 29 ஆயிரத்து 372 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 79 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. பெங்களூரு நகரில் 58 பேர், ராமநகரில் 7 பேர், சித்ரதுர்காவில் 5 பேர், துமகூருவில் 3 பேர், உடுப்பியில் 2 பேர், பல்லாரி, சாம்ராஜ்நகரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 23 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 45 ஆயிரத்து 247 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். புதிதாக பெங்களூரு நகரில் மட்டும் ஒருவர் இறந்தார். 29 மாவட்டங்களில் கொரோனா பலி இல்லை. 

40 ஆயிரத்து 49 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். நேற்று 94 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 3 ஆயிரத்து 380 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,776 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story