குழித்துறை நகராட்சியில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு


குழித்துறை நகராட்சியில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 27 March 2022 2:25 AM IST (Updated: 27 March 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை நகராட்சியில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

குழித்துறை, 
குழித்துறை நகராட்சியில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீல் வைப்பு
குழித்துறை நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, தொழில் வரி, கடை வாடகை கட்டணம் வசூலிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுகள் மற்றும் கடைகள் தோறும் சென்று வரி பாக்கியை வசூல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாகனங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
இந்தநிலையில் குழித்துறை நகராட்சியில் 5 கடைகள் தொழில் வரி, வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆணையாளர் ராமதிலகம் உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி குருசாமி, மேலாளர் ஜெயன் ஆகியோர் அந்த 5 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Next Story